என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

காசிக்கு சமமான திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலம்
- நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
- பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.
காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.
இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.
இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக பிரம்ம வித்யாம்பிகை திகழ்கிறார்.
திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள்.
மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.
பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.
கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.
நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம்.
கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.
பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.