search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவக்கிரகங்கள்-செவ்வாய் பகவான்!
    X

    நவக்கிரகங்கள்-செவ்வாய் பகவான்!

    • செவ்வாய்க்கு, “அங்காரகன்” என்றும் பெயர் உண்டு.
    • பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு “பூமி புத்திரன்” என்று பெயருண்டாயிற்று.

    செவ்வாய்

    செவ்வாய்க்கு, "அங்காரகன்" என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கு தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி.

    தேவியை பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு "பூமி புத்திரன்" என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரியபதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும்பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும்,

    அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும்பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.

    செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    Next Story
    ×