என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'
- காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
- இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.
பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".
காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.
ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.
இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.
இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.
ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.
இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.
ஸ்ரீயாகிய திருவை (மகாலட்சுமி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.
இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.