ஆன்மிக களஞ்சியம்

நதிகளுக்கு நன்றி சொல்லும் ஆடி பதினெட்டு

Published On 2024-07-19 08:30 GMT   |   Update On 2024-07-19 08:31 GMT
  • ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள்.
  • பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!” என்று வேண்டுகிறது.

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம்.

இது தேவர்களுக்கு இரவாகும். தை முதல் ஆனி முடிய உத்தராயணம். இது தேவர்களுக்கு பகலாகும்.

ஆடிப் பதினெட்டு:

ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுகிறது மனித இனம்.

ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள்.

பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!" என்று வேண்டுகிறது.

மனிதகுலத்தின் அந்த வேண்டுதலின்படி, அன்னையின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடியது.

அதற்கு நன்றி செலுத்தும் வகையில் 'ஆடிப் பதினெட்டு ' என்று கொண்டாடுகிறார்கள்.

பதினெட்டு என்ற எண் 'ஜய' த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும்.

மஹாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள், நதிக்கரைகளில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.

எனவேதான், காவிரி அன்னைக்கு 'ஆடிப் பதினெட்டு'அன்று நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகின்றனர்.

Tags:    

Similar News