ஆன்மிக களஞ்சியம்

காப்புப் படம்

அடுத்த மாதம் இந்தியா வரும் மெர்சிடிஸ் GLC எஸ்யுவி.. முன்பதிவு துவக்கம்!

Published On 2023-07-18 07:55 GMT   |   Update On 2023-07-18 07:55 GMT
  • புதிய மெர்சிடிஸ் GLC மாடல் GLC 300 பெட்ரோல், GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
  • புதிய மெர்சிடிஸ் GLC மாடலுடன் ஆஃ-ரோடு தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1.5 லட்சம் ஆகும். இந்திய சந்தையில் மெர்சிடிஸ் GLC மாடல் ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் GLC மாடல் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 4மேடிக் ஆஃப்-ரோடு தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 48 வோல்ட் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டட் மோட்டார் வழங்கப்படுகிறது.

 

சர்வதேச சந்தையில், இந்த கார் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த மாடலில் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 11.9 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய NT7 இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் GLC மாடலின் விலை ரூ. 75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் GLC மாடல் பிஎம்டபிள்யூ X3, ஆடி Q5, வால்வோ XC60, லெக்சஸ் NX மற்றும் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News