வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசி அதிபதி குரு சுக்ரனுடன் பரிவர்த்தனை செய்வதால் விரய ஸ்தானத்தில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தியாகிறார். முக்கிய ஆவணங்கள் தொடர்பாக, பூர்வீக நிலம் சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. கூட்டுத் தொழில் மீது உருவான வழக்குகள் முடிவுக்கு வரும்.சிலருக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கும். வேலையில் திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மன உளைச்சல் ஏற்படலாம். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும்.
ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஆர்வத்தில் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மார்ச் 29-ந்தேதி சனி பகவான் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக பலன் தருவார். தெய்வ நம்பிக்கை குறையும். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும் அல்லது வேற்று மத வழிபாட்டில் ஆர்வம் கூடும். திருமணம் கைகூடும். வரன் மிக அருகாமையிலேயே அமையும். சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். பவுர்ணமியன்று அந்தணர்களுக்கு உணவு, உடை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406