search icon
என் மலர்tooltip icon

    மீனம் - வார பலன்கள்

    மீனம்

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    கெட்டவன், கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மீன ராசிக்கு 3,8-ம் அதிபதியான சுக்ரன் மற்றொரு மறைவு ஸ்தானமான 12-ம்மிடத்தில் விரயாதிபதி சனியுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த கால நெருக்கடிகள் குறையத் துவங்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மறைமுக ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். மனைவி, பிள்ளைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.

    திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் நேரம். பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பண்டிகை கால விடுமுறையை திட்டமிடுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நோய்த் தாக்கம் குறையும். சிலர் தவறான நட்பு வலையில் மாட்டலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

    5.1.2025 முதல் 11.1.2025 வரை

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம்.தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.வைராக்கியத்தாலும், விடாமுயற்சியாலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ஜென்மச் சனி துவங்க உள்ளதால் பண விசயத்தில் யாரையும் நம்பக் கூடாது. திறமையால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள்.ஏழரைச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். பணக்கவலை குறையும். தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும்.

    திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ராசி அதிபதி குருவிற்கு 29.3.2025ல் சனி பார்வை ஏற்பட போவதால் பூர்வீகம், சொத்து தொடர்பான விவகாரங்கள் தடை தாமதமானாலும் நினைத்தபடி சாதகமாக நிறைவேறும். பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள்.வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை

    29.12.2024 முதல் 4.1.2025 வரை

    குடும்பத்தில் நிம்மதி கூடும் வாரம். குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.பிள்ளைகளின் திருமணத்திற்கு இந்த வாரம் நாள் குறிக்கலாம். சுப விசேஷத்திற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.கணவன், மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.தன யோகம் சிறப்பாக அமையும்.தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகமும் பொங்கும். மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும்.

    சிலர் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்பை வாங்கலாம். .பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். சிலருக்கு மறுமண யோகம் ஏற்படும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடை வார்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும்.மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும்.ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

    22.12.2024 முதல் 28.12.2024 வரை

    சகாயமான வாரம். நல்ல ஞானம், சிந்தனைகள் பெருகும். ராசி அதிபதி குரு சகாய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். சுயமாக செயல்படும் தைரியம் உருவாகும். சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப்பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.

    வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். திருமண முயற்சி நிறைவேறும். 25.12.2024 அன்று 1.50 மணி முதல் 27.12.2024 அன்று பகல் 1.56 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள்.முன் கோபத்தை குறைப்பதுநல்லது.வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

    15.12.2024 முதல் 21.12.2024 வரை

    விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய காலம். 6-ம் அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். மேலும் விரையச் சனி ஜென்மச் சனியாக மாறும் காலம் என்பதால் அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்.கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை பகைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். பணம், கொடுக்கல் வாங்கலில் நம்பிக்கையானவர்களே ஏமாற்றலாம்.

    அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும்.உத்தியோகத்தில் சாதகமான நிலை நீடித்தாலும் வேலைப்பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும். தடைபட்ட திருமண வாய்ப்புகள் கூடி வரும். சிலருக்கு தாய் வழி சீதனங்களாக பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மகாவிஷ்ணுவை வழிபட்டு இறை நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள அற்புதங்கள் நிறைந்த வாரமாக மாறும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

    8.12.2024 முதல் 14.12.2024 வரை

    லாபகரமான வாரம். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். 2, 9ம் அதிபதி செவ்வாய் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சனை முடிவுக்கு வரும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறவுகளிடம் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும்.

    காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள். திருமணத் தடை அகலும். பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

    1.12.2024 முதல் 7.12.2024 வரை

    வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறக்கும். சனி பகவான் ராசியை நோக்கி முன்னேறி வருவதால் எதிர்காலம் பற்றிய நல்ல சிந்தனைகள் உண்டாகும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனி போல் விலகும். தொழில் தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறும். எதிரிகளால் உண்டாகிய தொல்லைகள் விலகும். தொழில் ரீதியாக சந்தித்த பாதிப்புகள், உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் மங்கள ஓசையும், மழலை குரலும் ஒலிக்கப் போகிறது.

    பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாவதுடன் பூர்வீகச் சொத்துக்களும் உங்கள் கைக்கு வந்து சேரும். எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட விரயத்தை சுபமாக்க முடியும். சிலருக்கு சிறு சிறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். பெண்கள் நண்பிகள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. அக்கம் பக்கத்தினரின் தீய பார்வையால் ஆரோக்கியம் குறையும். உப்பு, மிளகாய் சுற்றிப் போடுவது நல்லது. சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

    24.11.2024 முதல் 30.11.2024 வரை

    சுமாரான வாரம். 2,9ம் அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தியாக மனப்பான்மை மிகுதியாகும் வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

    மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். 27.11.2024 அன்று மாலை 6.07 முதல் 30.11.2024 அன்று காலை 6.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் செய்கைகள் உங்கள் கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உங்கள் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். முருகப் பெருமானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை

    17.11.2024 முதல் 23.11.2024 வரை

    சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். மீன ராசிக்கு 6-ம்அதிபதியான சூரியன் ராசிக்கு 9ல் மறைவதால் பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க ஏற்ற காலம். இந்த கிரக அமைப்பு சிறு ஏற்றத் தாழ்வுகளை கொடுக்கும். பெருசாக எந்த நஷ்டமும் ஏற்படாது. ஆனால் வேலையில் சின்ன சறுக்கல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. செய்யும் தொழிலில் சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து போகும். இதை எல்லாம் ஈடுகட்ட நீங்கள் ஒரு படி அதிகமாக உழைத்தாலே போதும். இழந்ததை திரும்பவும் மீட்டெடுக்கலாம்.

    புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். பணவரவு திருப்தியாக இருக்கும். அனுபவ சாலிகளை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்காதீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்தோடு இருக்க வேண்டும்.புதிய முயற்சிகளில் ஈடுபட நேரிட்டால் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும்.பிறரின் விசயத்தில் தலையிட்டு மன உளைச்சலை அதிகரிக்கக் கூடாது. பண விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேய்பிறை அஷ்டமியில் பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

    ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசி அதிபதி குரு சுக்ரனுடன் பரிவர்த்தனை செய்வதால் விரய ஸ்தானத்தில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தியாகிறார். முக்கிய ஆவணங்கள் தொடர்பாக, பூர்வீக நிலம் சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. கூட்டுத் தொழில் மீது உருவான வழக்குகள் முடிவுக்கு வரும்.சிலருக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கும். வேலையில் திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மன உளைச்சல் ஏற்படலாம். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும்.

    ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஆர்வத்தில் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மார்ச் 29-ந்தேதி சனி பகவான் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக பலன் தருவார். தெய்வ நம்பிக்கை குறையும். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும் அல்லது வேற்று மத வழிபாட்டில் ஆர்வம் கூடும். திருமணம் கைகூடும். வரன் மிக அருகாமையிலேயே அமையும். சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். பவுர்ணமியன்று அந்தணர்களுக்கு உணவு, உடை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை

    3.11.2024 முதல் 9.11.2024 வரை

    ஆதாயமான வாரம். ராசிக்கு 9ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் புதன், தொழில் ஸ்தானத்தில் சுக்ரன். சுப கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளதால் சுகமான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.சுக்ரன். உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறார். ஆன்ம பலம் கூடும்.புதுப் பொலிவு ஏற்படும். சிலர் சுய தொழில் துவங்கலாம். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

    கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த உகந்த நேரம். பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.எதிர்ப்பு சக்தி கூடி உடல் நலம் சீராகும். கடன் தொல்லை குறையும்.உற்பத்தி பெருகி, லாபம் கூடும். சேமிப்பு உயரும். உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆன்மீகயாத்திரை செல்லும் விருப்பம் நிறைவேறும்.ஸ்ரீ காஞ்சி மகானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை

    27.10.2024 முதல் 3.11.2024 வரை

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். ராசிக்கு 6-ம் அதிபதியான சூரியன் ராசிக்கு 8-ல் நீசம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணி நிரந்தரமாகும். சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் சாதகங்களும், பாதகங்களும் சேர்ந்தே நடக்கும்.வீடு, வாகனம் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்காக சில விரயங்களை சந்திக்க நேரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.ஆடம்பரமான ஆடைகள், அணிமணிகள் வாங்கி மகிழ்வீர்கள். அரசு உத்தியோகம் உத்தியோகம் கிடைக்கும்.

    ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும்.மறுமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.31.10.2024 இரவு 11.15 முதல் 2.11.2024 இரவு 11.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கடன் சுமை கூடும்.வேலைப்பளு அதிகரிக்கும்.தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். விநாயகர் அகவல் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×