வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
வரவு செலவில் திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு 2,3-ம் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். விரும்பிய மாற்றங்கள் தேடிவரும். 6-ம் அதிபதி சுக்ரனும் ராசி அதிபதி குருவும் பரிவர்த்தனை பெறுகிறார்கள். கடன் பிரச்சனை உண்டாகும், என்பதால் பண விசயத்தில் கவனம் தேவை. பணம் வரும் வழியும் தெரியாது, போகும் வழியும் தெரியாது. சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். புதிய எதிரிகள் தலை தூக்குவார்கள்.
வாழ்க்கைத் துணை, வியாபார பங்குதாரரிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வியாபாரத்தில் பொருட்கள் திருடு போகும் வாய்ப்பு இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. சிலர் பழைய வேலையை ராஜினாமா செய்வார்கள். புதிய வேலை தேடுவார்கள். வேலைப்பளு அதிகரிக்கும். புதிய செல்போன் வாங்கலாம். ஞாபக சக்தி குறைவும், மன சஞ்சலமும் உண்டாகும். தந்தை மகன் கருத்து வேறுபாடு அகலும். திருமணத்திற்கு ஏற்ற காலம். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மாறும் எண்ணம் மேலோங்கும். பவுர்ணமியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406