12.01.2025 முதல் 18.01.2025 வரை
தடை தாமதங்கள் விலகி பாக்கிய பலன் உண்டாகும். பாக்கியாதிபதி சூரியனும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும் சம சப்தமாக பார்க்கும் அற்புதமான கிரக நிலவரம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரும். தந்தை மகன் உறவு சிறக்கும். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். தடைபட்ட திருமணம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் நடைபெறும். பொருத்தமான ஜாத ம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தியை பார்க்கும் யோகமான நேரம்.
14.1.2025 அன்று அதிகாலை 4.19 மணி முதல் 16.1.2025 அன்று காலை 11.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். பிறருக்கு ஜாமின் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும் என்பதால் கவனம் தேவை. பவுர்ணமியன்று அந்தணர்களுக்கு தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406