சினிமா

டி.வி. சீரியல் நடிகர் பிரதீப் தற்கொலை

Published On 2017-05-03 13:56 IST   |   Update On 2017-05-03 13:56:00 IST
சமீபத்தில் திருமணமான பிரபல டி.வி. சீரியல் நடிகர் பிரதீப் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
ஐதராபாத்:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சுமங்கலி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரதீப். இவர் ஐதராபாத்தில் உள்ள பப்புல்லாகுடா பகுதியில் வசித்து வந்தார்.

இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனே தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்ட பிரதீப் சமீபத்தில் டி.வி. நடிகை பவணி ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவரது தற்கொலை திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



பிரதீப் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் தனது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்த உண்மை நிலவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

Similar News