சினிமா
தங்கமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கத் பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #SathishKumarSivalingam #Sivakarthikeyan
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. போட்டியின் முடிவில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
இதில், ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சதீஷ்குமாரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
நேற்று சிவகார்த்திகேயனை சந்தித்த சதீஷ்குமார், அவரது டுவிட்டர் பக்கத்தில், `சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன். அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன்'. இவ்வாறு கூறியிருக்கிறார். #SathishKumarSivalingam #Sivakarthikeyan