சினிமா

குரு சேமசுந்தரமின் ஓடு ராஜா ஓடு ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2018-07-26 09:14 GMT   |   Update On 2018-07-26 09:14 GMT
ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் குரு சேமசுந்தரம் நடிப்பில் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் ஓடு ராஜா ஓடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OduRajaOdu
ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். 

விஜய் மூலன் தயாரிக்கும் இந்த படத்தில் நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

மேலும் இது டார்க் காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோஷ் நந்தா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜதின் சங்கர் ராஜ் (இயக்குனர்), சுனில் சி.கே ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். நிஷாந்த் ரவீந்திரன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். #OduRajaOdu
Tags:    

Similar News