விவாகரத்து ஆன போது மன அழுத்தத்தில் தினமும் 1 லிட்டர் மது அருந்தினேன் - மனம் திறந்த அமீர் கான்
- பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் அமீர்கான்,
- நடிகர் அமீர்கான் தனது 60வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்.
பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் அமீர்கான், கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாசி, ராஜா இந்துஸ்தானி, இஷ்க் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து பாலிவுட்டின் முன்னணி ஸ்டார் நடிகராக மாறினார். இவர் நடித்த பிகே, லகான், தங்கல் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளின. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இந்த திரைப்படங்கள் கொண்டு சென்றது.
இந்நிலையில், நடிகர் அமீர்கான் தனது 60வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். அப்போது தனது காதலியை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் ரீதா தத்தா, கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இவர்களை விவாகரத்து செய்துவிட்டார். அண்மையில் தான் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தனது மூன்றாவது காதலியான கெளரி ஸ்ப்ராட்டை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் " நான் முதல் மனைவியான ரீனா தத்தாவை விவாகரத்து செய்த போது கடும் மன அழுத்ததிற்கு சென்றேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன் சுமார் 1.5 வருடங்களுக்கு மிக அதிகமான அளவில் மது அருந்தினேன். என்னை அனைவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒரு மனிதனாக மட்டுமே தெரியும் ஆனால் நான் அந்த மன அழுத்தத்தில் ஒரு நாளைக்கு 1 பாட்டில் மதுவை அருந்தினேன் " என சமீபத்தில் நடந்த நேர் காணலில் கூறியுள்ளார்.