சினிமா செய்திகள்
null

STR 49 படம் வசூல் ராஜா MBBS மாதிரி ஜாலியா இருக்கும் - ஆகாஷ் பாஸ்கரன்

Published On 2025-03-22 16:53 IST   |   Update On 2025-03-22 16:54:00 IST
  • சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
  • இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குக்கிறார்

அண்மையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கலந்துக் கொண்ட நேர்காணலில் STR49 படத்தை குறித்து சில தகவல்களை கூறியுள்ளார் அதன்படி " இந்த படத்திற்காக பல இயக்குனர்களை நாங்கள் தேடினோம். அப்பொழுது நடிகர் சிம்பு தான் இயக்குனர் ராம்குமாரை பரிந்துரைத்தார். இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இது இருக்கும்" என கூறியுள்ளார்.

சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News