சினிமா செய்திகள்

வைரலாகும் இளம் தயாரிப்பாளரின் பேச்சு .. யார் இந்த ரியா ஷிபு?

Published On 2025-03-21 22:16 IST   |   Update On 2025-03-21 22:16:00 IST
  • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற்றது. இதில் படக்குழு அனைவரும் கலந்துக் கொண்டனர். மேடையில் விக்ரம், துஷாரா, எஸ்.ஜே சூர்யா , சுராஜ் மற்றும் இளம் பெண் தயாரிப்பாளரான ரியா ஷிபு பேசினர்.

இதில் ரியா ஷிபு பேசியது இணையத்தில் பலரதும் கவனத்தை பெறுள்ளது. இவர் பேச்சு பார்வையாளர்களை கட்டிப்போட்டது. பேச்சில் மிகத் தெளிவு, மிகவும் எனெர்ஜியாக பேசி அங்கு இருந்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். யார் இந்த ரியா ஷிபு என்பதை பார்க்கலாம் வாங்க.

20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸின் உரிமையாளர் ஆவார். இவரது தந்தை ஷிபு மலையாள திரையுலகில் மிகப்பெரிய வினியோகிஸ்தர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை தமீன் பில்ம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை தயாரித்தும் வினியோகிஸ்தும் உள்ளார். பல வெற்றி திரைப்படங்களான புலி, இருமுகன், RRR, போன்ற திரைப்படங்களை தமிழில் தயாரித்துள்ளனர்.

 எச்.ஆர் பிக்சர்ஸ்  தக்ஸ், முரா மற்றும் தற்பொழுது வீர தீர சூரன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படமே இவர்கள் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.


ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஃபேமஸ் மற்றும் வைரலானவர். இவர் செய்யும் ரீல்ஸ்-க்கும் மற்றும் பிரத்யேக எடிட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளன. ஆனால் தற்பொழுது இவர்தான் படத்தின் தயாரிப்பாளர் என தெரிந்ததுல் பலருக்கும் ஷாக் அடித்தது போல் இருக்கிறது. இவர் பேசிய வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்த சிறு வயதிலேயே சிறந்த படங்களை தயாரித்து வரும் ரியா ஷிபுவிற்கு பாராட்டுகள்.




Full View



Tags:    

Similar News