வீடியோ: ஆஸ்கார் விருது கிடைக்கும்னா 4-வது குழந்தைக்கு ரெடி.. சுராஜ் கலகல பேச்சு
- வீர தீர சூரன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் மலையாள நடிகர் சுராஜ் கலகலப்பாக பேசியுள்ளார்.
- முதலில் ஆண் குழந்தை பிறந்த போது எனக்கு முதல் மாநில விருது கிடைத்தது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற்றது.
இதில் மலையாள நடிகர் சுராஜ் கலகலப்பாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், எனக்கு 3 குழந்தைகள் உள்ளது. முதலில் ஆண் குழந்தை பிறந்த போது எனக்கு முதல் மாநில விருது கிடைத்தது. 2-வது ஆண் குழந்தை பிறந்த போது 2-வது மாநில விருது கிடைத்தது. இது நல்லா இருக்குதே. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் ஒரு விருது கிடைக்குது.
அப்புறம் 3-வது எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போ எனக்கு தேசிய விருது மற்றும் மாநில விருது கிடைத்தது. இனி ஆஸ்கார் விருது கிடைக்கும் என்றால் 4-வது குழந்தை பெற்று கொள்வதற்கு நான் ரெடி. அதற்காக எல்லாரும் வேண்டி கொள்ளுங்கள். எனது மனைவியிடம் நான் பேசிக்கிறேன்.