சினிமா செய்திகள்

தேசிய விருது வென்ற "குற்றம் கடிதல்" படத்தின் அடுத்த பாகம் - வெளியான அப்டேட்

Published On 2024-05-10 16:23 GMT   |   Update On 2024-05-10 16:23 GMT
  • குற்றம் கடிதல் 2 படத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார்.
  • படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

திரைப்பட விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளில் இயங்கி வருபவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். இவர் 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற திரைப்படம் "குற்றம் கடிதல்."

ஜே.எஸ்.கே. தயாரிப்பில் உருவான 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

 


இந்த படம் குறித்து பேசிய ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், "கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

'குற்றம் கடிதல் 2' படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது. இதர நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

Tags:    

Similar News