மண் சரிவில் 7 பேர் உயிரிழப்பு.. கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த்
- கூலி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
- நன்றி கூறியபடி விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கூலி படத்தின் படப்பிடில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். சில தினங்களில் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்-க்கு அங்கிருந்த ரசிகர்கள், செய்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அனைவருக்கும் நன்றி கூறியபடி விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த்-இடம் செய்தியாளர்கள் திருவண்ணாமலை மண் சரிவில் ஏழுபேர் உயிரிழந்தது பற்றி கேள்வி எழுப்பினர். அதை கேட்ட ரஜினிகாந்த் எப்போ நடந்தது, ஓ மை காட் - எக்ஸ்ட்ரீம்லி சாரி என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.