நடிகை ஹனிரோஸ் பற்றி சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து: 27 பேர் மீது வழக்குப்பதிவு
- தொழிலதிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்.
- சமூக வலைதளத்தில் சில கேள்விகள் ஆபாசமானதாக இருக்கின்றன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஹனிரோஸ். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'காந்தர்வன்', 'பட்டாம்பூச்சி', 'மல்லுக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஹனி ரோஸ் குற்றம் சாட்டினார். தனது சமூகவலைதள பக்கத்தில் இந்த குற்றச்சாட்டை அவர் வெளியிட்டார்.
கேரள தொழிலதிபர் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், தனது உடல் அமைப்பை குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனக்கு தொல்லை கொடுக்கும் தொழிலதிபர் உள்ளிட்ட வர்களின் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பேன் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் நடிகை ஹனிரோஸ் தெரிவித்த இந்த குற்றச்சாட்டு மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் அவரது பதிவுக்கு சமூகவலை தளத்தின் மூலமாகவே பலர் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டுள்ளனர். அதில் சில கேள்விகள் ஆபாசமானதாக இருக்கின்றன. முக்கியமாக தொழலதிபர் வெளியிட்ட பதிவுக்கு நீங்கள் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லையா? அதனை ரசிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதுபோன்ற கேள்வி களுக்கு நடிகை ஹனிரோஸ் சமூகவலைதளத்திலேயே பதில் கருத்து தெரிவித் திருக்கிறார். அதே நேரத்தில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் ஆபாசமான கருத்து தெரிவித்தவர்களின் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
அவர் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலை யத்தில் நேற்று புகார் செய்தார். மொத்தம் 30 பேர் மீது நடிகை புகார் கூறியி ருக்கிறார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீ சார், 27 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். அவர்களின் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.