புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் ஜனவரி 11 முதல் திரையரங்குகளில்
- இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'.
- பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.
இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியான 32 நாட்களில் ரூ. 1831 கோடியை வசூல் செய்துள்ளது.
தற்பொழுது படத்தின் கூடுதல் 20 நிமிட காட்சியை சேர்த்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தின் வெர்ஷன் வரும் 11 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் நேர அளவி 3 மணிநேரம் 20 நிமிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20 நிமிடம் கூட்டினால் 3 மணி நேரம் 40 நிமிடங்களாக தற்பொழுது மாறியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.