சினிமா செய்திகள்
காரை சோதனை செய்ய மறுப்பு தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ்.. போலீசாருடன் வாக்குவாதம்- நடந்தது என்ன ?
- ஐதராபாத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்.
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தன்னுடைய கார் டிக்கியை திறக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்ஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர். நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்க சொல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நடிகை நிவேதா பெத்துராஜ் காரின் டிக்கியை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த வீடியோ விரைவில் வெளிவரும் அவரது தெலுங்கு படத்திற்கான புரோமோஷனுக்காகவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.