அஜித்தின் புதிய படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இவ்வளவு தொகையா?
- விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
- சில தினங்களுக்கு முன் போஸ்டர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டின் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் குட் பேட் அக்லி (Good bad Ugly) படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அத்துடன் சண்டை காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து மூன்று கட்டங்காளக படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 95 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமைக்கான தொகை இது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் இப்படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மேலும், விடாமுயற்றி படத்தையும் பெரும் தொகை கொடுத்து நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.