சினிமா செய்திகள்

சினிமாவை விட்டு விலகலா? அமிதாப் பச்சன் விளக்கம்

Published On 2025-03-01 07:33 IST   |   Update On 2025-03-01 07:33:00 IST
  • அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவில் ‘செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது' என்று குறிப்பிட்டு இருந்தார்.
  • பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் சமீபத்தில் தமிழில் வெளியான 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் திரைக்கு வந்த 'கல்கி 2898' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

82 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த வயதிலும் இளம் நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவில் 'செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சினிமாவில் இருந்து அமிதாப் பச்சன் விலகப்போவதையே இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று பலரும் பேசினர்.

இதற்கு விளக்கம் அளித்து அமிதாப் பச்சன் கூறும்போது, ''நான் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பதிவிட்டதில் என்ன தவறு இருக்கிறது. நான் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதுதான் அந்த பதிவுக்கு அர்த்தம்'' என்றார். இதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News