சினிமா செய்திகள்
null

பணம் கேட்டு மிரட்டிய கும்பல்: பாபி சிம்ஹா போலீசில் புகார்

Published On 2023-09-03 12:06 IST   |   Update On 2023-09-03 15:46:00 IST
  • மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
  • இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிசிம்ஹாவிற்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை கொடைக்கானலை சேர்ந்த காண்ட்ராக்டர்கள் ஜமீர், காசிம்முகமது ஆகியோர் மேற்கொணடு வந்தனர்.

இவர்களுக்கும், பாபிசிம்ஹாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் தாமதமாகி வந்துள்ளது. இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா காண்ட்ராக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காண்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் நடிகரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் பாபிசிம்ஹா கொடுத்த புகாரின்பேரில் காண்ட்ராக்டர்கள் உள்பட 4 பேர் மீது கொலைமிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா தெரிவிக்கையில், நான் முறையான அனுமதிபெற்றுதான் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறேன். பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார். என்னையும், எனது தாயாரையும் அவர் மிரட்டிய அனைத்து ஆவணங்களும் உள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கஞ்சா கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல், வெளிநாட்டு பெண்மணியை மிரட்டிய வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

அதேபோல் தன்னையும் அவர் மிரட்டி வருகிறார். பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ள இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News