இந்த வார ஓடிடியில் என்ன பார்க்கலாம்?
- மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் சூது கவ்வும் 2 இயக்கி இருந்தார்.
- குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் அலங்கு.
ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. மொழி பாக்பாடின்றி பல்வேறு மொழி திரைப்படங்களை மக்கள் ஓடிடியில் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.
சூது கவ்வும் 2
விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் சூது கவ்வும் திரைப்படம் முக்கிய பங்கை வகிக்கும். அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் இப்படத்தை இயக்கி இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அலங்கு
குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் அலங்கு. இப்படத்தை எஸ்.பி.சக்திவேல் இயக்கி இருந்தார். இப்படம் மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தை அன்புமணியின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ளார். இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
ஃபேமிலி படம்
செல்வக்குமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஃபேமிலி படம். இப்படத்தில் விவேக் பிரசன்னா நயாகனாக நடித்திருக்கிறார். அனிவீ இசையமைத்துள்ள இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மகனின் திரைப்படத்திற்காக குடும்பமாக சேர்ந்து படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்படும் குடும்பத்தின் கதையாக அமைந்துள்ளது ஃபேமிலி படம். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்
பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிரசாத் முருகன் இயக்கி இருக்கிறார். ஒரு துப்பாக்கி 6 நபர்களின் கைகளுக்கு செல்கிறது. அது அவர்களை எந்த சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கதை. இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
பணி
மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பணி. இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
ரைஃபில் கிளப்
ஆஷிக் அபு இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது ரைஃபில் கிளப் திரைப்படம். ஷியாம் புஷ்கரன், திலீஷ் கருணாகரன் மற்றும் சுஹாஸ் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் விஜயராகவன், திலீஷ் போதன் அனுராக் காஷ்யப், வனி விஷ்வநாத், சுரேஷ் கிருஷ்ணா, தர்ஷனா மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.