படத்தை பார்த்தப்பின் அதில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை - ரேகாசித்திரம் படக்குழுவை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
- ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். திரைப்படம் இதுவரை உலகளவில் 36 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படக்குழுவை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது "ரேகாசித்திரம் திரைப்படத்தை பார்த்தேன். நான் இப்படத்தை பற்றி எழுத நீண்டநாள் காத்துக் கொண்டிருக்கிறேன். இப்படத்தை பார்த்தப்பின் அதில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. இப்படத்தில் மிகச்சிறந்த திரைக்கதையும் எழுத்தும் இருக்க்கிறது. அனஸ்வரா டார்லிங். உங்களுடைய திரைப்படங்களை எல்லாம் நான் பார்த்து வருகிறேன், இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
ஆசிபீ உங்களுடைய எதார்த்தமான நடிப்பு அபாரமாகவுள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்கள். நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் மிக திறமையாக நடிக்கிறீர்கள்.. படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்" என குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.