நடிகர் மோகன் பாபு மீது வழக்கு பதிவு
- மோகன் பாபு வீட்டிற்கு சென்ற செய்தியாளர்கள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டனர்.
- நடிகர் மோகன் பாபு தன்னை கைது செய்யாமல் இருக்க தெலுங்கானா ஐகோர்ட்டில் வருகிற 24-ந்தேதி வரை முன் ஜாமின் பெற்றார்.
நடிகர் மோகன் பாபுவின் சொத்துக்களை பிரிப்பது சம்பந்தமாக அவரது மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோரிடையே தகராறு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மனோஜ் மஞ்சு தனது தந்தை வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் பாபு வீட்டிற்கு சென்ற செய்தியாளர்கள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி வீசினார்.
இதில் செய்தியாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் நடிகர் மோகன் பாபு, அவரது மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இந்த நிலையில் நடிகர் மோகன் பாபு தன்னை கைது செய்யாமல் இருக்க தெலுங்கானா ஐகோர்ட்டில் வருகிற 24-ந்தேதி வரை முன் ஜாமின் பெற்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்