சினிமா செய்திகள்

Casting Call - சிம்புவின் #STR49 படத்தில் நடிக்க வாய்ப்பு

Published On 2025-02-06 18:09 IST   |   Update On 2025-02-06 18:09:00 IST
  • சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
  • இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வரவேற்பை பெற்றது. இன்னொரு பக்கம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர்48' படத்தில் நடித்து வருகிறார். கமலுடன் இணைந்து 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார்.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்புவின் 49வது படமான இது க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இப்படத்தில் சிம்பு பொறியியல் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகர்களுக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது . இதற்கான போஸ்டரை தயாரிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் 1 நிமிட நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வீடியோவை அனுப்ப வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராம் ரீல்சை அனுப்பக்கூடாது எனவும் மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணை {8825807965} கொடுத்துள்ளனர். நடிப்பில் ஆர்வம் மிக்க நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News