'விடாமுயற்சி' பார்த்த பின் அஜித் சொன்னது என்ன? இயக்குநர் மகிழ் திருமேனி பதில்
- அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர்.
- தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை என் சார்பிலும், என் குழுவின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து இன்று தான் நடிகர் அஜித்தின் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
பல தடைகளை தாண்டி நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இதனால் இந்த திரைப்படத்தை ஒரு திருவிழா போன்றே அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நேற்றிரவே கொண்டாட்டம் களை கட்ட தொடங்கி விட்டது.
அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர். சில ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் பொறித்த டிசர்ட் அணிந்தும் வந்திருந்தனர்.
காலை 9 மணிக்கு வெளியான 'விடாமுயற்சி'யின் சிறப்பு காட்சியை காண இசையமைப்பாளர் அனிருத், நடிகை திரிஷா, Good Bad Ugly படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் ஆரவ் ஆகியோர் திரையரங்குகளுக்கு வந்தனர்.
இதனை தொடர்ந்து, ரசிகர்களுடன் 'விடாமுயற்சி' படத்தை கண்டுகளித்த பின் இயக்குனர் மகிழ் திருமேனி கூறுகையில், தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை என் சார்பிலும், என் குழுவின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. டப்பிங் சமயத்தில் அஜித் சார் படத்தை பார்த்தார். அவர் வெரி ஹாப்பி என்றார்.
இதனிடையே, அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி மீண்டும் இணையுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சார் சொல்லுவார் என்று கூறினார்.
முன்னதாக, 'விடாமுயற்சி' பட தொடக்கத்தில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.