தன்னைத்தானே சாட்டையில் அடித்து 'திரு மாணிக்கம்' படத்திற்கு ப்ரொமோஷன் செய்த கூல் சுரேஷ்
- அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்
- லாட்டரி சீட்டை மையமாக வைத்து திரு மாணிக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் திரு மாணிக்கம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லாட்டரி சீட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொண்டு 'திரு மாணிக்கம்' படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ப்ரொமோஷன் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.