சினிமா செய்திகள்

இளையராஜா 'பயோபிக்' படத்தில் தனுஷ் - பர்ஸ்ட் லுக் வெளியானது

Published On 2024-03-20 10:41 GMT   |   Update On 2024-03-20 10:41 GMT
  • இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
  • நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன்.

இசைத் துறையில் 47 வருடங்களாக யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

இளையராஜாவை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேதை இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர்.





இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய 'பயோபிக்' உருவாகிறது.இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கை குறித்த சம்பவங்கள் இடம்பெறுகிறது.

இந்தப்படத்தை சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தனுஷ், "நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News