சினிமா செய்திகள்
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'- தனுஷ் போட்ட புது பதிவு
- இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கிய உள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கிய தனுஷ் எக்ஸ் தள பக்கத்தில், காதல், சிரிப்பு, நட்பை கொண்டாட வாருங்கள்... இன்று முதல்... ஓம் நமச்சிவாய.. என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.