OTT

ஊடகங்களால் பாராட்டப்பட்ட 'லாரா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

Published On 2025-02-21 21:48 IST   |   Update On 2025-02-21 21:48:00 IST
  • இந்தாண்டு தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'.
  • திரைப்படத்தில் கார்த்திகேசன்,அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, நடித்து இருந்தனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'.

இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன்,அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, நடித்து இருந்தனர்.

மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார்.

காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது.

இப்படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள் கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள்.

படத்திற்கு நல்ல மாதிரியான நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன.

உதாரணத்திற்குச் சில:

படங்களைத் தர நிர்ணயம் செய்யும் IMDB படத்திற்கு 10 க்கு 9.9 தர மதிப்பெண்கள் கொடுத்திருந்தது.'புக் மை ஷோ 'தளம் 10 க்கு 9 குறியீட்டைக் காட்டியது.

தமிழின் முன்னணி இதழான தினத்தந்தி 'துப்பறியும் திரில்லர் கதையை அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் எகிற வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி திறமையான இயக்குநராக கவனம் பெறுகிறார் மணி மூர்த்தி 'என்றும் 'கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் 'என்றும் பாராட்டிருந்தது .

இந்து தமிழ் திசை இதழ் 'யூகிக்க முடியாத ஆனால் நம்பகமான திருப்பங்களால் நிறைந்த திரைக்கதையால் இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு' என்று கூறியிருந்தது.

தினகரன் இதழ், 'ரகு ஸ்ரவன் குமாரின் பின்னணி இசை, கிரைம் த்ரில்லருக்குத் தேவையான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 'என்று பாராட்டியது.

மாலைமலர் இதழ், 'யாருமே எதிர்பாராத திருப்பத்தை இறுதிக்காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. சுவாரசியம் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக லாரா படம் அமைந்துள்ளது 'என்று பாராட்டியது.

ZEE தமிழ் NEWS, ' க்ரைம் தில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு' லாரா' நிச்சயம் பிடிக்கலாம்' என்று கூறியது.

டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில இதழ் ,' ஒரு சிறு நகரம் சார்ந்த மர்மக் கதையாக இது சரியாக எடுக்கப்பட்டுள்ளது' என்று பாராட்டியது .

அது மட்டுமல்லாமல் நான்கரை நட்சத்திர மதிப்பையும் கொடுத்து இருந்தது.

இவ்வாறு ஊடகங்களில் கவனம் பெற்றுப் பாராட்டுகளைப் பெற்ற 'லாரா' படம் வணிகரீதிலும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் திரைப்படங்களிலேயே முதலில் வெற்றிக்கனி ருசித்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

இப்போது 'லாரா' திரைப்படம் 'டெண்ட் கொட்டா' ஓடிடி தளத்தில் வெளியாகி  ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

வெளியான அன்றே ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தியது. படக் குழுவினர் படத்தின் அடுத்த வெற்றிப் பரிமாணத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News