சினிமா செய்திகள்

இந்த மாதிரி செய்யாதீங்க - ரசிகரால் யாஷிகா வேதனை

Published On 2025-02-19 08:02 IST   |   Update On 2025-02-19 08:02:00 IST
  • ரசிகர் ஒருவர் யாஷிகா ஆனந்தின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.
  • அதை பார்த்து அதிர்ச்சியான யாஷிகா ஆனந்த் ரசிகரை கண்டித்துள்ளார்.

தமிழில் 'துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, சில நொடிகளில்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடி வருகிறார்.

யாஷிகா ஆனந்துக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். விபத்தில் சிக்கி மீண்டும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் யாஷிகா ஆனந்தின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியான யாஷிகா ஆனந்த் ரசிகரை சாடி உள்ளார்.

இதுகுறித்து யாஷிகா ஆனந்த் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இது பைத்தியக்காரத்தனமான செயல். இப்படி பச்சை குத்தும்போது எவ்வளவு வலி உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும். ஆனால் என் உருவத்தை பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு நான் தகுதியானவள் இல்லை. இதுமாதிரி செய்யாதீர்கள். இதற்கு பதில் உங்கள் அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இதுபோல் வேறு யாரும் செய்யவேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News