சினிமா செய்திகள்

டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்த நடிகர் மம்மூட்டி

Published On 2025-02-20 17:38 IST   |   Update On 2025-02-20 18:52:00 IST
  • குடியரசு துணைத் தலைவருடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.
  • நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மம்மூட்டி நடித்து வெளியான "டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்" திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

தற்போது இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி, டெல்லியில் இந்திய துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர்-ஐ சந்தித்தார். நடிகர் மம்மூட்டியுடன் அவரது மனைவி சுல்ஃபத் மற்றும் சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். மேலும், துணை குடியரசு தலைவருடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.

 


மோகன் லால் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மம்மூட்டி விரைவில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் படம் மூலம் நடிகர் மம்மூட்டி மற்றும் மோகன் லால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News