null
'டிராகன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. வெளியான அப்டேட்
- தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
- திரையரங்கில் வசூல் குவித்தும் வரும் 'டிராகன்' ஓடிடி-யிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி உலகளவில் வசூல் குவித்து வருகிறது.
இதனிடையே, டிராகன் திரைப்படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் டிராகன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 'டிராகன்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. திரையரங்கில் வசூல் குவித்த 'டிராகன்' ஓடிடி-யில் வெளியாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.