OTT
null

இந்த வார ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

Published On 2025-03-05 17:31 IST   |   Update On 2025-03-06 15:20:00 IST
  • அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
  • 'குடும்பஸ்தன்' திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரையரங்கில் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திரையரங்கிள் வெளியாவதை விட ஓடிடியில் வாரந்தோறும் அதிக திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளிவருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

விடாமுயற்சி:

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இம்மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

குடும்பஸ்தன்:

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக குடும்பஸ்தன் படம் கையாண்டது. இந்நிலையில், இப்படம் வரும் 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ரேகா சித்திரம்:

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஆசிஃப் அலி நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ரேகாசித்திரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் உலகளவில் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், ரேகாசித்திரம் திரைப்படம் வரும் 7 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சங்கராந்திகி வஸ்துனம்:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான வெங்கடேஷ் நடிப்பில் உருவான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது.

ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து 2025 ஆம் ஆண்டின் தெலுங்கு சினிமாவின் முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை சங்கராந்திகி வஸ்துனம் பதிவு செய்தது. இந்நிலையில், சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தண்டேல்:

சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் உலகளவில் இதுவரை 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் வரும் 7 ஆம் தேதி நெபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடிகர் தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ராஜாகிளி திரைப்படம் . இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கினார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை அனைத்தையும் தம்பி ராமையா மேற்கொண்டார். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News