சினிமா செய்திகள்
டிராகன் படத்தின் Yendi Vittu Pona வீடியோ பாடல் வெளியீடு
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
- திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.
சமீபத்தில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்தனர். அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்சனா, லியோன் ஜேம்ஸ், பிரதீப் ரங்கநாதன் விஜயை சந்தித்தனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற ஏன்டி விட்டு போன? பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கொ சேஷா வரிகளில் சிலம்பரசன் பாடியுள்ளார்.