
முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 'எம்புரான்'
- மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
- கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகினது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
'எம்புரான்' படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' நேற்று வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.
இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான 'ஆடு ஜீவிதம்' இருந்தது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் அதிகபட்சமாக 8.95 கோடி ரூபாய் இந்தியா முழுவதும் வசூல் செய்தது. 'லூசிஃபர்' முதல் நாளில் 6.10 கோடி ரூபாய் வசூலை கடந்து 2019ம் ஆண்டு முதல் நாள் வசூலாக இருந்தது. இந்த வசூலையெல்லாம் கடந்து 'எம்புரான்' முதல் நாளில் வசூலில் சாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.