சினிமா செய்திகள்
GHIBLI டிரண்ட்: வைரலாகும் பிரபலங்களின் அனிமேஷன் புகைப்படங்கள் - சுவாரஸ்ய பின்னணி!

GHIBLI டிரண்ட்: வைரலாகும் பிரபலங்களின் அனிமேஷன் புகைப்படங்கள் - சுவாரஸ்ய பின்னணி!

Published On 2025-03-28 17:06 IST   |   Update On 2025-03-28 17:06:00 IST
  • மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் பிரபலமானவை.
  • இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டாஸ் ஆகியோர் உருவாக்கினார்.

எக்ஸ், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரண்டிங்கில் இருப்பதை காணலாம்.

கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

1985 ஆம் ஆண்டு இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா, தயாரிப்பாளர் தோஷியோ சுசுகி ஆகியோரால் ஜிப்லி ஸ்டூடியோ நிறுவப்பட்டது.

ஸ்பிரிட்டட் அவே (SPIRITED AWAY), மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் ஜிப்லி ஸ்டுடியோவால் உருவாக்கி வெளியிடப்பட்டன.

இந்த படங்களில் ஜிப்லி ஸ்டூடியோவுக்கென தனி பாணி அனிமேஷன் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜப்பான் அனிமே ரசிகர்களுக்கு பரீட்சயமான பாணி இது.

இயக்குநர் ஹயாவோ மியாசாகி 

 

இந்நிலையில் இந்த பாணி தற்போது உலகளவில் டிரண்ட் ஆக தொடங்கியுள்ளது. பிரபலங்கள், அவர்களின் முகிக்யமான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜிப்லி பாணி அனிமேஷனாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பிரபலங்களே தங்கள் அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்து டிரண்ட்டில் இணைந்து வருகின்றனர். 

Tags:    

Similar News