`உன் படத்தை முடித்து கொடுக்காம சாகமாட்டேன்னு சொன்னார்' - மணிகண்டன் இரங்கல்
- பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், விஜய், முதல்வர் ஸ்டாலின், மற்றும் பலர் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தில் நடித்த மணிகண்டன் அவரது இரங்கலை செய்தியாளர்கள் முன் கூறினார். அதில் அவர் "2011 ஆம் ஆண்டு இந்த வீட்டில் நான் சொன்ன திரைப்படக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் வாங்கும் சம்பளத்தில் பாதி தான் என்னால் தர முடிந்தது. சக நசிகர்களுக்கு செய்ய வேண்டிய வசதியை கூட நான் அவருக்கு கொடுக்கவில்லை. என்னை மாதிரி சினிமாவில் எந்த வித அனுபவம் இல்லாதபோது வந்த இளைஞன் கூறிய திரைப்படத்தில் நடிப்பதற்கு பெரிய மனசு வேணும். அந்த அளவுக்கு அவர் இந்த நடிப்பு கலையை நேசித்தார். அவர் என் படத்தில் நடிக்கும்போது டெல்லி கணேஷ் இறந்துவிட்டதாக வதந்திகள் வந்தது. நான் அவருக்கு கால் செய்தேன். அப்போது அவர் சாப்பிட்டு கொண்டே நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன். உன் படத்துல நடிச்சு முடிக்காம சாகமாட்டேன் கவலப்படாத என்றார். அவரைப் போல் ஒரு நகைச்சுவை தன்மை உடைய மனிதனை பார்க்கவே முடியாது. அவருடை ஆன்மா சாந்தியடையே நான் வேண்டிக்கிறேன்" என கூறினார்.
மணிகண்டன் மற்றும் டெல்லி கணேஷ் இணைந்து நடித்து 2011 ஆம் ஆண்டு எடுத்த திரைப்படம் நரை எழுதும் சுயசரிதம். இப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தற்பொழுது சோனி லைவ் ஓடிடியில் உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.