பேட்மேன் நடிகருக்கும் பாப் பாடகிக்கும் விவாகரத்து.. சொத்துக்கள் எவ்வாறு பிரியும் தெரியுமா?
- பென் அப்லெக்கிடம் இருந்து அவரது மனைவி ஜெனிபர் லோபஸ் விவாகரத்து கோரியுள்ளார்.
- ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார்.
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்
இந்நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளார்.
ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் மற்றும் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை திருமணம் செய்திருந்தார்.
இதேபோல் நடிகர் பென் அப்லெக் ஏற்கனவே நடிகை ஜெனிபர் கார்னரை திருமணம் செய்திருந்தார்.
இந்நிலையில், பென் அப்லெக்கும் ஜெனிபர் லோபசும் விவாகரத்திற்கு பின்பு தங்களது சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்று திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் என்பது ஒவ்வொருவரின் சொத்துக்களும் கடன்களும் விவாகரத்திற்கு பின்பு எவ்வாறு பிரிக்கப்படவேண்டும் என்பதை பற்றிய ஒப்பந்தமாகும்.
அதனால் திருமணத்திற்கு பின்பு இருவரும் சம்பாதித்த பணம் மற்றும் வாங்கிய சொத்துக்கள் இருவருக்கும் சரிபாதியாக பங்கிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
பென் அப்லெக்க்கை விட லோபஸ் அதிக வருவாயை கொண்டுள்ளதால் இந்த விவகாரத்தால் அதிக சொத்துக்களை லோபஸ் இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.