2024 ரீவைண்ட் - கடந்த ஆண்டில் வெற்றியடைந்த Part - 2 திரைப்படங்கள்
- 2024 ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது.
- அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து வெற்றியின் ஆட்டத்தை தொடங்கி வைத்தது.
2024 ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது. அதில் பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது சில திரைப்படங்கள் வெற்றியடைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து வெற்றியின் ஆட்டத்தை தொடங்கி வைத்தது. அதேப்போல் 2024 ஆம் ஆண்டு பல படங்களில் பார்ட் 2, 3 என வெளிவந்து பாக்ஸ் ஆபிசை நிறப்பியது. அந்த திரைப்படங்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
அரண்மனை 4
சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் சுந்தர் சி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது அரண்மனை 4 திரைப்படம். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் வேட்டையாடியது. இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
புஷ்பா 2 தி ரூல்
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் வெளியானது புஷ்பா 2 திரைப்படம். இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தி மொழியில் அதிகம் வசூலித்த திரைப்பட பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. திரைப்படம் இதுவரை 1800 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும்.
பூல் புல்லையா 3
அனீஸ் பஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி திக்ஸித் மற்றும் டிரிப்டி திம்ரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பூல் புல்லையா 3 திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. திரைப்படம் இதுவரை உலகளவில் 423 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்
ஸ்ரீ 2
நிரன் பாட் எழுத்தில் அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரதா கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஸ்ரீ 2 திரைப்படம். இப்படம் ஒரு நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமாகும், இப்படம் மாடாக் சூப்பர் நேட்சுரல் யூனிவர்ஸ்-இன் 4 படமாகும். இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.இப்படம் இதுவரை உலகளவில் 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
டிமான்ட்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது டிமான்ட்டி காலனி 2 திரைப்படம். இப்படம் ஒரு ஹாரர் திரைப்படமாக அமைந்தது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் 85 கோடி ரூபாய் வசூலில் பெற்று மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது விடுதலை 2 திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.