Recap 2024

2024 ரீவைண்ட்: கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார்- 40 ஆண்டுகளுக்கு பின் முதலிடத்தை இழந்த மாருதி சுசுகி

Published On 2025-01-05 13:54 IST   |   Update On 2025-01-05 13:54:00 IST
  • கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார்கள் பட்டியல் வெளியானது.
  • ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனை.

ஒரே ஆண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற சாதனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது.

இதுதவிர கடந்த 40 ஆண்டுகளாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் வருடாந்திர விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டாடா பன்ச் நிறுவனம் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை படைத்துள்ளது.

 


கடந்த 2024 ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் 2.02 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் 1.90 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடலும், நான்காவது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா மாடலும் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஐந்தாவது இடம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் பெற்றுள்ளது.

2024 இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் டாப் 5 பட்டியல்:

டாடா பன்ச்: எஸ்.யு.வி. பிரிவில் விற்பனை செய்யப்படும் டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 02 ஆயிரத்து 030 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.

மாருதி சுசுகி வேகன் ஆர்: மாருதியின் ஹேச்பேக் மாடலான வேகன் ஆர் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 855 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

மாருதி சுசுகி எர்டிகா: இந்திய சந்தையில் பிரபல எம்.யு.வி. மாடல்களில் ஒன்றான எர்டிகா கடந்த ஆண்டு 1 லட்சத்து 90 ஆயிரத்து 091 யூனிட்கள் விற்பனையானது.

மாருதி சுசுகி பிரெஸ்ஸா: மாருதி சுசுகியின் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு 1 லட்சத்து 88 ஆயிரத்து 160 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா: இந்திய சந்தையில் பிரபல எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்று கிரெட்டா. இந்த மாடல் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 919 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News