Recap 2024

2024 ரீவைண்ட்: மிட் ரேஞ்சில் மிரட்டிய ஸ்மார்ட்போன்கள்

Published On 2025-01-02 11:55 GMT   |   Update On 2025-01-02 11:55 GMT
  • 2024 சிறந்த மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.
  • ஸ்மார்ட்போன் பிரான்டுகள் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்தன.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னணி ஸ்மார்ட்போன் பிரான்டுகள் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்தன. மிட் ரேஞ்ச் பிரிவில் ஏராளமான மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 2024 சிறந்த மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்..

மோட்டோ எட்ஜ் 50 நியோ:

மிட் ரேஞ்ச் பிரிவில் மோட்டோ பிரான்டின் எட்ஜ் 50 நியோ சக்திவாய்ந்த பிராசஸர், சிறப்பான கேமரா சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வீகன் லெதர் பேக் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் பிரீமியம் தோற்றத்துடன், சீரான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டுள்ளது.

 


நத்திங் போன் 2a பிளஸ்:

நத்திங் பிரான்டின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக 2a பிளஸ் விற்பனைக்கு வந்தது. தனித்துவ டிசைன், சக்திவாய்ந்த மீடியாடெக் டிமென்சிட்டி 7350 ப்ரோ 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இத்துடன் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ F6:

போக்கோ பிரான்டின் F சீரிஸ் மாடல்கள் மிட் ரேஞ்ச்-இல் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்டிருக்கின்றன. அந்க வகையில் போக்கோ F6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் உள்ளது. இந்த பட்ஜெட்டில் இத்தனை சக்திவாய்ந்த பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக போக்கோ F6 தனித்து நிற்கிறது.

 


விவோ T3 அல்ட்ரா:

விவோ நிறுவனம் மிக மெல்லிய டிசைன் மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனாக விவோ T3 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200+ பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு 4:

ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை நார்டு சீரிசில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த நார்டு 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன், ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 பிராசஸர், 256 ஜிபி மெமரி, சிறப்பான கேமரா சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News