2024 ரீவைண்ட்: தலைசிறந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்
- ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
- பிக்சல் 9 சீரிஸ் மாடல்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் பல்வேறு புது மாடல்களும், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் அடங்கும். மலிவு பட்ஜெட்டில் துவங்கி மிக அதிக விலை என பல்வேறு விலை பிரிவுகளில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.
இதில் கடந்த ஆண்டு வெளியான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
விவோ X200 ப்ரோ:
விவோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது ஸ்மார்ட்போன்களின் கேமரா தரம் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக விவோ X சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கேமரா சிறப்பாக இருப்பதை பயனர்களும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், விவோ நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த விவோ X200 ப்ரோ ஸ்மார்ட்போன் 2024 ஆண்டின் சிறந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அமைந்தது.
புகைப்படங்களை எடுக்க விவோ X200 ப்ரோ மாடலில் செய்ஸ் பிரான்டிங் கொண்ட 50MP கேமரா, 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிராசஸர், 16 ஜிபி ரேம், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ XL:
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த பிக்சல் 9 ப்ரோ XL மாடலில் அதிநவீன, சக்திவாய்ந்த டென்சார் ஜி4 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS, வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா:
அதிவேகமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், மேம்பட்ட டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள், அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்:
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்ததில் டாப் எண்ட் ஐபோன் மாடல் தான் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ். மேம்பட்ட டிசைன், அதிவேக பிராசஸர், ஏ.ஐ. வசதிகளை வழங்கும் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் என ஏராளமான சுவாரஸ்ய அம்சங்களுடன் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.