null
கார் பந்தயம் முடியும் வரை நடிக்கப்போவதில்லை- நடிகர் அஜித்
- நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை.
- கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன்.
நடிகர் அஜித் குமார் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றார்.
அங்கு ரேசிற்கான பயிற்சியில் அவர் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கார் ரேஸ் வீரராக போட்டியில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித்குமார் பேட்டியளித்துள்ளார், அதில் திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என அஜித் குமார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.