சினிமா செய்திகள்

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா

Published On 2025-01-05 03:13 GMT   |   Update On 2025-01-05 03:13 GMT
  • வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி நடிக்கிறார்கள்.
  • இளையராஜா இசையமைப்பதுடன், இரண்டு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வரும் சூழல், 'டிரெண்ட்' ஆகி வருகிறது.

அந்தவகையில் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.


ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது. வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி நடிக்கிறார்கள்.

படத்துக்கு இளையராஜா இசையமைப்பதுடன், இரண்டு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, "திருக்குறள் படத்தின் இசைக் கோர்ப்பு பணிகளையும் முடித்துவிட்டு இளையராஜா என்னை அழைத்தார். இதுவரை நானே இசையமைக்காத, தொடாத ஒரு வித்தியாசமான டியூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி, 'முல்லை வாசம்' என்ற பாடலை போட்டு காண்பித்தார்.


தயாரிப்பு பணியில் மதுரையை சேர்ந்த டி.பி.ராஜேந்திரனின் பங்கு அளப்பரியது. அதேபோல நடிகர்-நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக வாசுகியாக நடிக்கும் தனலட்சுமி விரதம் இருந்து நடித்து தந்தார். படம் விரைவில் வெளியாகும்'' என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News