ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ வீடியோ விரைவில்...
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.
- தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் "ப்ரோமோ சூட்" பணிகள் கடந்த மாதம் நடைப்பெற்றது.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் திரைப்படத்தின் அறிவிப்பை விரைவில் அறிவிக்கப்போவதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பொங்கலை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகும் எனவும் இது ஜெயிலர் 2 திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜியுடன் வினாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.