சினிமா செய்திகள்

நிஜ வாழ்வில் இணைந்த பீட்டர் பார்க்கர் - எம்.ஜே... நிச்சயதார்த்தத்தை முடித்த ஸ்பைடர் மேன் ஜோடி!

Published On 2025-01-11 16:23 IST   |   Update On 2025-01-11 16:23:00 IST
  • அவருக்கு காதலியாக எம்.ஜே கதாபாத்திரத்தில் ஜெண்ட்யா நடித்தார்
  • 2025 கோல்டன் குளோப்ஸ் விருது நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை ஜெண்ட்யா அணிந்திருந்த 5 காரட் மோதிரம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

2017 ஆம் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படம் மூலம் உலக அளவில் அறியப்பட்டவர் டாம் ஹோலேண்ட். புதிய ஸ்பைடர்மேனாக மக்கள் மனங்களை கவர்ந்த அவர் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகராக இருந்தார்.

தொடர்ந்து ஸ்பைடர் மேன் ஃபார் பிரம் ஹோம், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படங்களிலும், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திலும் சைபடர்மேனாக டாம் ஹோலேண்ட் நடித்தார். அவருக்கு காதலியாக எம்.ஜே கதாபாத்திரத்தில் ஜெண்ட்யா நடித்தார். திரையில் காதலர்களாக நடித்த இவர்களுக்கு இடையே உண்மையிலேயே காதல் மலர்ந்தது.

 

இருப்பினும் தங்கள் காதல் குறித்து பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் ஜனவரி 5 ஆம் தேதி நடந்த 2025 கோல்டன் குளோப்ஸ் விருது நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை ஜெண்ட்யா அணிந்திருந்த 5 காரட் மோதிரம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

 

இது டாம் மற்றும் ஜெண்ட்யாவின் நிச்சயதார்த்த மோதிரம் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் டாம் ஹொலேண்ட் தந்தை டொமினிக் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

 

தனது பதிவில், டாம் ப்ரொபோஸ்காக எல்லாவற்றையும் கவனமாக திட்டமிட்டான். ஜெண்ட்யாவுடைய தந்தையின் அனுமதியை கூட முன்கூட்டியே வாங்கிவிட்டான்.

மோதிரத்தை வாங்குவது, பின் ஜெண்ட்யா தந்தையுடன் பேசுவது என எப்போது, எங்கு, எப்படி, என அனைத்தையும் திட்டமிட்டான் என்று பதிவிட்டுள்ளார். டாம் மற்றும் ஜெண்ட்யா ஆகிய இருவருக்கும் 28 வயதாவது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

 

Tags:    

Similar News